இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை

0
9
Google news ல் தொடர இங்கே கிழிக் செய்யுங்கள்->-> click cursor icon with click here button free png
இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை

இன்சுலின் போடுவதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். உடலுக்குத் தேவையான இன்சுலின் ஊசி மூலம் போட்டுக் கொள்வதன் மூலம் பலன் கொடுக்கும்.

இன்சுலின் போடும் முன் காலை நேர சர்க்கரையும் HbA1C அளவு எவ்வளவு இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். இன்சுலின் போடும்போது எந்த அளவு வரும்வரைக்கும் இன்சுலின் எடுக்கலாம் என்று ஒரு இலக்கை மருத்துவரின் ஆலோசனையுடன் நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

போடும் இன்சுலின் உங்களுக்கு சரியாக வேலை செய்கிறதா என்பதை தொடர்ச்சியாக ரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் போடும் இன்சுலின் அளவுகளை சரியாகக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் எவ்வளவு போட்டீர்கள், அந்த அளவை அதிகரித்து இருக்கீங்களா இல்ல குறைச்சு இருக்கீங்களா போன்றவற்றை கணக்கில் கொள்வது முக்கியம்.

இன்சுலினை வீட்டிலேயே போட்டுக் கொள்கிறீர்கள் என்றால் அதை எப்டி சரியான முறையில் ஸ்டோர் செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்சுலின் மருந்தின் expiry தேதியை கவனிக்க வேண்டும். அதைத் தாண்டிய பிறகு அந்த மருந்தை பயன்படுத்த கூடாது,

இன்சுலின் எந்த நேரத்தில் போடுவது நல்லது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு எந்த அளவு இன்சுலின் பயன்படுத்த வேண்டும், அதை எப்படி எடுத்து பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்,

இன்சுலின் பயன்படுத்திய பிறகு உடலில் ரத்த சர்க்கரை அதகரிப்பதையும் குறைவதையும் அதன் அறிகுறிகளை வைத்து அறிந்து கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

ஒருவர் இன்சுலின் போடும் முன்பு இந்த விஷயங்களையெல்லாம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை
சர்க்கரை நோயாளிகள் பொதுவாக இன்சுலின் ஊசியை அடிக்கடி போட்டுக் கொள்வார்கள். புதிதாக இன்சுலின் ஊசி பயன்படுத்துவோர், ஊசி போட்டுக் கொள்வது மிகவும் பயத்தை உண்டாக்கும் செயல் என நினைப்பார்கள். அது உண்மையல்ல. எளிதாக இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம்.

இன்சுலின் மருந்தை எடுத்துக் கொள்வதற்கு சிரிஞ்சுகள் அவசியம் தேவை என்பது உங்களுக்குத் தெரியும். பொதுவாக 40 ஐ.யு. அளவுள்ள சிரிஞ்சுகள் ஏற்புள்ளவை. எனவே இவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.

இன்சுலின் ஊசியை உடலில் செலுத்திக் கொள்வதற்கு முன்பு சிரிஞ்சு, ஆல்கஹால் ஸ்வாப், இன்சுலின் ஆகியவற்றை தயாராக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

கைகளை சுத்தமாகக் கழுவிக்கொண்டு பாட்டிலை உங்கள் உள்ளங்கைகளுக்கு இடையே வைத்து மெதுவாக உருட்ட வேண்டும். இது இன்சுலினை ஒன்றாகக் கலக்கும். கலக்குவதற்கு குலக்க வேண்டாம். இதனால் காற்றுக்குமிழிகள் தோன்றி சிரிஞ்சினுள் செல்ல நேரிடலாம்.

இன்சுலின் புதிய பாட்டிலாக இருநூதால் பிளாஸ்டிக் மூடியை திறந்து வீசிவிடவும். இதேபோல் சிரிஞ்சின் ஊசி பொருத்தப்பட்டுள்ள மூடியையும் நீக்கவும். ஊசி மேல் நோக்கியவாறு இருக்கும் வகையில் சிரிஞ்சைப் பிடிக்கவும்.

எப்போதும் சிரிஞ்சை உங்கள் கண் மட்டத்திற்கு சமமாக இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டால்தான் பாரல் மீதுள்ள அளவீட்டை பார்க்க முடியும்.

இன்சுலின் பாட்டில்கள் வாக்யூம் – சீல் செய்யப்பட்டவை. நீங்கள் இன்சுலினை வெளியே எடுக்கும் முன்பு காற்றை பாட்டிலின் உள்ளே விடவேண்டும். மெதுவாக இழுக்க வேண்டும். நீங்கள் நாற்பது யூனிட் இன்சுலினை வெளியே எடுத்தால், சிரிஞ்சினுள் நாற்பது யூனிட் காற்றை இழுக்க வேண்டும்.

இன்சுலின் பாட்டிலை கவிழ்த்து, சிரிஞ்சு கீழ்ப்பகுதியில் இருக்குமாறு பிடித்துக்கொண்டு பிளஞ்சரை மெதுவாக கீழ் நோக்கி இழுத்து இன்சுலினை போதுமான அளவு எடுத்துக் கொள்ளலாம்.

சிரிஞ்சினுள் காற்று புகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். காற்று இருந்தால் அதை வெளியேற்றிவிடுவது அவசியமாகும்.

இவ்வாறு எடுத்துக்கொள்ளப்பட்ட இன்சுலினை ஊசியின் முனையில் மூடியிட்டு வைத்துக்கொண்டு உடலில் எந்த இடத்தில் அதை குத்திக்கொள்ள நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் ஆல்கஹால் கொண்டு நன்றாகத் துடைத்துவிட வேண்டும்.

ஊசியிலிருந்து மூடியைக் கழற்றிவிட்டு பென்சிலைப் பிடிப்பதைப் போல் ஒரு கையினால் சிரிஞ்சைப் பிடித்து, சுத்தம் செய்யப்பட்ட பகுதியை லேசாகக் கிள்ளிப் பிடிக்க வேண்டும்.

கிள்ளிப்பிடிக்கப்பட்ட பகுதியில் ஊசியைச் செலுத்தலாம். ஊசி குத்திய இடத்தில் ஆல்கஹால் ஸ்வாப்பை வைத்து அழுத்திக்கொள்ள வேண்டுமே தவிர, துடைக்கக்கூடாது. ஊசியில் ஒரு துளி இரத்தம் வந்தாலும் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நீங்கள் எடுத்துக்கொண்ட இன்சுலின் அளவை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஐந்து நிமிடங்களுக்குள் கலக்கப்பட்ட இன்சுலினை ஊசி மூலம் உடம்பில் செலுத்திக்கொள்ள வேண்டும். நீண்ட நேரம் வெளியில் வைத்திருந்தால் இன்சுலின் வேலை செய்யும் விதம் மாறுபடக்கூடும்.

இன்சுலின் போடும் முறை

FB IMG 1697699882153 இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை FB IMG 1697699886575 இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை FB IMG 1697699884409 இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை FB IMG 1697699888711 இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை FB IMG 1697699893061 இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை FB IMG 1697699890868 இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை FB IMG 1697699895292 இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை FB IMG 1697699898918 இன்சுலின் போடும் போது கவனிக்க வேண்டியவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here