சிறுநீரக பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள்

0
2
Google news ல் தொடர இங்கே கிழிக் செய்யுங்கள்->-> click cursor icon with click here button free png
சிறுநீரக பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள்

சிறுநீர் பாதை அமைப்பு மற்றும் சிறுநீரகங்கள் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும்.

சிறுநீரகங்கள் நச்சுகள், இரசாயனங்கள் மற்றும் கூடுதல் திரவங்களை அகற்றுவதன் மூலம் நமது இரத்தத்தை சுத்தப்படுத்துதல், நமது இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல், எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரித்தல் மற்றும் இரத்த சிவப்பணு உற்பத்தியை ஒழுங்குபடுத்துதல் உட்பட பல முக்கியமான செயல்பாடுகளைக் கொண்டுள்ளன.

சிறுநீரக பிரச்சனைகளின் அறிகுறிகள் பொதுவாக மழுப்பலாக இருக்கும்; எனவே உங்கள் சிறுநீரகங்கள் வீக்கமடைவதற்கும், வீக்கமடைவதற்கும், சேதமடைவதற்கும் அல்லது பிற கடுமையான பிரச்சனைகளுக்கு ஆளாகும் முன் அவற்றை அறிந்துகொள்வதும், அடையாளம் கண்டுகொள்வதும் மிகவும் முக்கியம்.

முகம் பாதங்கள் வீங்குதல்
முகம் வீங்குதல், அல்லது பாதங்களும் அடிவயிறும் வீங்குதலும் இந்த நோய்களைக் காட்டிக் கொடுத்து விடும். இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வீக்கங்கள் முதலில் முகத்தில் ஆரம்பித்து கண் இமைகளைத் தொட்டு விட்டு முக்கியமாக காலை வேளையில் மிகவும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும் நிலைகளாகும்

சிறுநீரக பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள்.

சிறுநீரகங்கள் பழுதாவதே முகம் வீங்கும் அறிகுறியால் தெரிவிக்கும் செய்தி. ஆனால் வெறும் வீக்கங்கள் மட்டுமே போதுமான அறிகுறிகள் அல்ல. ஒருசில மாதிரியான சிறுநீரக பழுதுகளில் முறையாக வேலை செய்து கொண்டிருக்கும் சிறுநீரகங்கள் கூட வீக்கங்களைக் கொண்டு வரும். (உதாரணத்திற்கு நெஃப்ராடிக் சின்ட்ரோம் போன்ற நோய் வகைகள்) . ஒரு சிலருக்கு அந்த வீக்கமே காணப்படாமல் போகலாம். ஆனால் சிறுநீரகங்கள் குறிப்பிடப்படும் அளவுக்கு பாழாகி இருக்கும்.

பசியின்மை மற்றும் வாந்தி எடுத்தல்
பசியின்மை, அசாதாரண வாய் ருசி, மற்றும் மிகக் குறைவாக உணவில் நாட்டம் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். இது மேலும் மேலும் பழுதாகும்பொழுது, -விஷப் பொருட்களின் அளவு இரத்தத்தில் அதிகமாகும்பொழுது, – சம்பந்தப் பட்ட நோயாளிக்கு வாந்தி மற்றும் அடிக்கடி விக்கல்கள் வரும்.

உயர்இரத்த அழுத்தம் – ஹைப்பர் டென்ஷன்
சிறுநீரகங்கள் பழுதடைந்தவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவது சகஜம். இளம் வயதில் அதாவது 30 வயதிற்குள் இது ஏற்பட்டால் அல்லது மருத்துவர் சோதிக்கும்பொழுது உயர் இரத்த அழுத்தம் உறுதியானால், சிறுநீரகக் கோளாறுகளே அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இரத்தசோகையும் உடல்நலிவாதலும்
உடல்நலிவு, ஆரம்ப வலிகள், கவனக் குறைபாடு ஆகியவை இரத்த சோகை உள்ளவர்களுள் தென்படும் பொதுவான அறிகுறிகளாகும். மிக மிக மோசமாக சிறுநீரக நோய்கள் தாக்கும் பொழுது இது போன்ற அறிகுறிகள் ஆரம்பமாகலாம்.

பொதுவான சிகிச்சைகள் மூலம் இரத்த சோகையை குணப்படுத்த முடியவில்லையெனில், சிறுநீரக செயலிழப்பு என்பதை உறுதி செய்யலாம்.

எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத தாக்கங்கள்
கீழ் முதுகில் வலி, உடல் வலி, அரிப்பு மற்றும் கால்களில் பிடிப்பு போன்றவை பொதுவாக சிறுநீரக நோய்களின் பிரதிபலிப்பு ஆகும்.

வளர்ச்சி குன்றுதல் மற்றும் உயரம் குறைவாக இருத்தல் மற்றும் கால் எலும்புகள் வளைந்து கொடுத்தல் – இவை எல்லாம் சிறுநீரக நோய்கள் குழந்தைகளைத் தாக்கும்பொழுது வரக் கூடிய அறிகுறிகள்.

சிறுநீரக பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள்

சிறுநீரைப் பொறுத்த சில கோளாறுகள்.

சிறுநீர் சார்ந்த பொதுவான பிரச்னைகள்
1. சிறுநீரின் கன அளவு குறைதல் சிறுநீரக நோய்களின் பொதுவான அறிகுறியாகும்.

2. சிறுநீர் கழிக்கும் பொழுது எரிச்சல் எடுத்தல், அடிக்கடி சிறுநீர் கழிதலும், சிறுநீர் கழிக்கும்பொழுது இரத்தமும் சேர்ந்து போதல் அல்லது சீழும் சேர்ந்து வருதல் என்பன சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறி.

3. சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் அடைப்பு வலியை ஏற்படுத்தும் அல்லது சிறுநீர் அளவு மிகவும் குறைந்து துளித்துளியாக வெளி வரும். மிகவும் மோசமான நிலைகளில், சிறுநீர் கழிக்க முடியாத சூழ்நிலையும் உருவாகும்.

மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டாலும் சிறுநீரக நோய் என்று முடிவுகட்டி விடக் கூடாது. இவ்வகை அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவரைக் கலந்து ஆலோசிப்பது அவசியமாகும்.

சோதனைகளைச் செய்தும் பரிசோதனைகளுக்கு உட்படுத்திக் கொண்டும் முடிவுக்கு வருவது நல்லது. கடுமையான சிறுநீரக நோய்கள் உள்ளிருந்து கொண்டே தொடர்வது கூட சாத்தியம் என்பதை அவசியம் உணர்ந்தாக வேண்டும். இது நெடுநாட்களாகவே கூட நீடித்துக் கொண்டு இருக்கலாம்.

வெளிப்புறத்தில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு இருக்கலாம். இளம் வயதிலேயே, இரத்த அழுத்த நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், சிறுநீரக நோய் எதுவும் தாக்கவில்லை என்பதை முதலில் ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here